கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் 63நாயன்மார்கள் வருஷாபிஷேக விழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலில் உள்ள 63 நாயன்மார்கள்,தொகை அடியார்கள் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகள் வருஷாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் -பூவனநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள 63 நாயன்மார்கள்,தொகை அடியார்கள் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகள் வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு சங்கல்பம், கும்ப ஸ்தாபனம், யாகபூஜைகள் மற்றும் சுவாமி,அம்பாளர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மஹா அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து 63 நாயன்மார்கள்,தொகை அடியார்கள் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகளுக்கு மாஹேஷ்வர பூஜை, வேள்வி பூஜைகள் நடைபெற்று, புனித நீர் மேள தள முழங்க எடுத்து வரப்பட்டு, பஞ்சவாத்தியங்கள் முழங்க புனித நீர் உற்றப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை