நிறுத்தப்பட்ட பஹ்ரைன் நாணயங்கள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் உலக நாடுகளின் பணத்தாளினை சேகரித்து அந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரத்தை எடுத்துரைத்து வரும் பணத்தாள்கள் சேகரிப்பு அமைப்பாகும்.
மேலும் சேகரிப்பாளர்கள் பல்வேறு நாடுகளின் நாணயங்கள், பணத்தாள்கள் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக நூல்கள் வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில் நிறுத்தப்பட்ட பக்ரைன் நாணயங்கள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. சந்திரசேகரன் வழங்கிய கட்டுரையினை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் நூலாக வெளியிட்டார். நூலினை வெளியிட்டு விஜயகுமார் பேசுகையில், பஹ்ரைன் நாட்டின் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, பஹ்ரைன் நாட்டிலிருந்து 500 ஃபில்ஸ் நாணயம் 2011 ஆண்டு நிறுத்தப்பட்டது. 500 ஃபில்ஸ் நாணயம் பைமெட்டாலிக் 500 ஃபில்ஸ் துண்டின் பின்புறத்தில் முத்து நினைவுச்சின்னம் இடம்பெற்றுள்ளது.
பஹ்ரைனின் தலைநகர் மனாமாவில் உள்ள முத்து ரவுண்டானாவின் மையத்தில் 1982 முதல், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜி.சி.சி) நிகழ்வில் முத்து நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. இக் காரணத்திற்காக முத்து ரவுண்டானா ஜி.சி.சி ரவுண்டானா என்றும் அழைக்கப்பட்டது.
முத்து நினைவுச்சின்னம் ஒரு முத்துவை வைத்திருக்கும் 'தோவ்ஸ்' ஜி.சி.சி.யின் ஆறு உறுப்பு நாடுகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.
பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ். பஹ்ரைனின் மிக உயர்ந்த மதிப்பு நாணயம் 500 ஃபில்ஸ் (அரை பஹ்ரைன் தினார் ) ஆகும். நாணயத்தின் பின் பக்கத்தில் முத்து நினைவுச்சின்னத்தைக் கொண்டிருந்தது.
கருத்துகள் இல்லை