அய்யாசாமி எழுதிய மாபெரும் மனித நேயர் ஐயா நல்லகண்ணு நூல் வெளியிட்டு விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான ஆர் நல்லகண்ணுவின் 95வது பிறந்த நாள் விழாவும், தோழர் நல்லகண்ணு குறித்து க. அய்யாசாமி எழுதிய "மாபெரும் மனிதநேயர் " புத்தக வெளியீட்டு விழாவும் சென்னை தி. நகர் சர்.பி.டி. தியாகராயர் அரங்கத்தில் ஜன.8 அன்று நடைபெற்றது. ஊடகவியலாளர் வீரபாண்டியன் நூலை வெளியிட சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவன பொதுமேலாளர் பி.பன்னீர் செல்வம் , முனைவர் அ.பிச்சை, வழக்கறிஞர். ச.செந்தில்நாதன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் தா.சவுண்டையா, நக்கீரன் கோபால், டாக்டர் டி. வடிவேல் முகுந்தன், டி.வி.எம் சேவாபாலம் நிறுவனர் எம். இருளப்பன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டு வாழ்த்துரைத்தனர். தோழர் நல்லகண்ணு பார்வையாளராக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார். காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் சிறப்புரைத்தார்.
கருத்துகள் இல்லை