தூத்துக்குடி:குளத்தூர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பத்திரகாளியம்மன் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மாரியப்பன் நாடார், முத்துக்கனியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு பொன்விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது
இதில். கல்லூரி இயக்குனர் முனைவர் கோபால் தலைமையில்.கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் கெங்குமணி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அன்பழகன் வரவேற்று பேசினார். தத்தம் துறை தலைவர்கள், துறைபேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கல்லூரி வாசல் முன்பு கோலமிட்டு பொங்கல் வைத்து சூரியபகவானை வணங்கினர். தொடர்ந்து மாணவர்களுக்கு கபடிபோட்டி, உறி அடித்தல், ஸ்லோ பைக் ரேஸ், மாணவிகளுக்கு பலூன் உடைத்தல், மியூசிக் சேர் போட்டிகள் நடந்தது. அதையடுத்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இறுதியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசுகளை கல்லூரி நிர்வாகத்தினர் வழங்கினர். தமிழ்த்துறை தலைவர் அன்னலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.இதில் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை