• சற்று முன்

    கோவில்பட்டி அருகே ஊராட்சி செயலாளரை மாற்றக் கோரி - பொதுமக்கள் தர்ணா போராட்டம்


    கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற செயலாளராக சுப்புலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் பூமாரி என்பவர் தலைமையில் ஊராட்சி செயலாளர் சுப்புலட்சுமி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்ற  லஞ்சம் கேட்பதாகவும், மேலும் அரசு வழங்கும் மக்கள் நலத்திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரிவிப்பது இல்லை என்றும்,மாதத்தில் ஒருமுறை தான் அலுவலகத்திற்கு வருவதாகவும், இதனால் ஊராட்சி மன்றத்தில் சில சான்றுகள் பெற முடியாமல் மக்கள் தவித்து வருவதாகவும், ‌ எனவே ஊராட்சி மன்ற செயலாளர் உடனடியாக பணி இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கடந்த 26ந்தேதி கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    மேலும் தங்களது கோரிக்கை குறித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க இரண்டு வேனில் கிளப்பினர்‌. இதையடுத்து கொப்பம்பட்டி போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கைகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad