• சற்று முன்

    பொங்கல் பானை, அடுப்பு தயாரிக்கும் பணி தீவிரம் .....

    பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், திருவாரூரில் அடுப்பு, பானைகள் உள்ளிட்டவை தயாரிக்கும் பணி அதிவிரைவாக  நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான், சேமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மண் அடுப்புகள் தயாரிப்புக்காக அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் இருந்து களிமண்னை கொண்டு வரும் தொழிலாளர்கள், அவற்றை தண்ணீரில் வைத்து நன்கு பிசைந்து, அதனைக் கொண்டு அடுப்புகளை வடிவமைக்கின்றனர்.அவ்வாறு தயாரிக்கப்படும் அடுப்புகள் வெயிலில் உலரவைக்கப்பட்டு, பின்பு அவற்றை சூளையில் இடுகின்றனர். இறுதியாக செம்மண் கரைசல் கொண்டு அடுப்புகளின் மீது வண்ணம் பூசி மீண்டும் வெயிலில் காய வைக்கின்றனர்.

    இதே பாணியிலேயே மண் பானைகளும், சட்டிகளும் தயார் செய்யப்படுகின்றன. இந்தப் பொருட்களை, குறைந்த விலை கொடுத்தே வியாபாரிகள் வாங்கி செல்வதாகக் கூறும் தொழிலாளர்கள், தாங்களே நேரடியாக சந்தைக்குக் கொண்டு சென்றாலும் அதிக விலை எனக் கூறி தங்களது பொருட்களை பொதுமக்கள் ஒதுக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    விவசாயிகள் தினம், கைத்தறி வாரம் கொண்டாடப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது போல், மண்பாண்ட தொழிலை காக்கும் வகையில் மண்பாண்ட தினம் கொண்டு வந்து, அதன் விற்பனை சதவீதத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad