அதிமுகவின் முன்னாள் விசுவாசி முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தப்பேரியில் பிறந்தவர்.திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட பேரவை தொகுதியில் 1977,1980,1984,1999 நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.கடந்த சில மாதமாக நோய்வாய்ப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து நேற்று மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமணையில் சிகிக்சை அளிக்கப்பட்டது . சிகிக்சை பலனிற்றி இன்று அதிகாலை காலமானார்.. இவரது மகன் மனோஜ் பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராகவும் சட்ட பேரவை உறுப்பினராவும் இருந்துள்ளார். சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க குரல் கொட்டுதவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மணைவி சந்தியா பாண்டியன் திருநெல்வேலி மனோன் மானிய சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தராக பதவி வகித்தார்.
கருத்துகள் இல்லை