Header Ads

  • சற்று முன்

    திருவாடானை பகுதிகளில் கண்மாய்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியிருப்பதால் விவசாயம் பாதிப்பு


    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பியுள்ளது. மேலும் சில கண்மாய்களில் அளவிற்கு அதிகமான தண்ணீர் தேங்கியிருப்பதால் நெல் நன்கு விளைந்தும் அறுவடை செய்ய முடியாமல் தண்ணீரில்  மூழ்கி பயிர்கள் அழிகியும் மீண்டும் முளைத்து வீணாகியுள்ளது இதனால் விவசாயம் சுமார் 200 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இது குறித்து மங்களக்குடி குரூப் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து தேவண்டதாவு கிராம மக்கள் தெரிவிக்கையில் கடந்த நான்கு வருடங்களாக விவசாயம் பொய்த்து கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் தற்போது அளவிற்கு அதிகமாக மழை பெய்துள்ளது. குறிப்பாக கட்டவிளாகம் பெரிய கண்மாய், கட்டவிளாகம் தனியன் கண்மாய் மற்றும் கட்டவளாகத்தில் உள்ள சிறிய கண்மாய்களில் இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் கூடதலாக தேங்கி தேவண்டதாவு கிராம குடியிருப்புவரை தண்ணீர் தேங்கியுள்ளது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது என்று கண்மாய் சருக்கை என்று சொல்லப்படும் பகுதிகளில் கட்டவிளாகம் கிராம மக்கள் மணல் மற்றும் பலகைகளை கொண்டு அடைத்து வைத்திருப்பதால்தான் இவ்வாறு விவசாயம் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்கள். இது குறித்து பொதுப்பணித் துறையினரிடமும் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்கள். கடந்த நான்கு வருடங்களாக பருவமழை இல்லாமல் விவசாயம் பொய்த்துப்போன நிலையில் இந்த வருடம் பருவமழை பெய்தும் விவசாயம் வீணாகிவிட்டது என கவலை தெரிவித்தார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad