தொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் மகன் காளியப்பன் (எ) காளிஸ்வரன் வாயை பொத்தி தூக்கி சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த சிறுமியின் உறவினர்கள் தப்பியோட முயன்ற காளியப்பனன மடக்கி பிடித்து தொண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் அங்கு வந்த போலிசார் காளியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்து வழக்கு பதிந்து இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை