தோழர் ப.ஜீவாவின் 57ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை காசிமேடு இடுகாடு அருகே நடைபெற்றது
சென்னை தண்டையார்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ப.ஜீவாவின் 57ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை காசிமேடு இடுகாடு அருகே நடைபெற்றது. அவரது சமாதியை கட்சி தோழர்கள் அனைவரும் மலர்தூவி மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் . இதனையடுத்து தண்டையார்பேட்டை மணிகுண்டு அருகே உள்ள தோழர் ஜீவா திருவுருவ சிலைக்கு கட்சி தோழர்கள் அணைவரும்ம் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் மாநில துணைசெயளாலர் மு.வீரபாண்டியன், மாவட்ட செயளாலர் எம்.எஸ். மூர்த்தி, மாவட்ட தலைவர் ப.கருணாநிதி, மூ.சம்பத் ஏ.ஐ.டி.யூ.சி எம்.வசந்தகுமார் சக்கரபாணி,வெங்கடேஸ் (ஏ.ஐ.ஒய்.எப் )எஸ்.குப்பன் ,கி.சு.குமார் ஒதுகப்பட்ட வாழ்வுரிமை, ரேனுகா மாதர் சங்கம், யூ.ஜிலானி, மு.ராமசந்திரன், மு.ஜெய்சங்ர், ஏ.ராமலிங்கம், டீ.நூற் முகமது, மற்றும் கட்சி தோழர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்தினர்.
கருத்துகள் இல்லை