திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள ஜீப் ஓட்டுநர் சரவணன் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை !
திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள ரயில்வே கேட் அருகே குடி போதையில் இருந்த சரவணன் பணி மாறுதல் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டதால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
சரவணன் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள ஜீப் ஓட்டுநராக உள்ளார். இவர் திருவண்ணாமலை தீபம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலக ஜீப் ஓட்டுநர் நேற்று இரவு ரயில்வே கேட் அருகே குடிபோதையில் இருந்த போது விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் மோதி தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை அலுவலகத்திலிருந்து வெளியூருக்கு பணிமாறுதல் பெற்ற காரணத்தால் ஏற்பட்ட பிரச்சனையால், தங்களுடைய பிள்ளைகள் திருவண்ணாமலையில் பள்ளிப்படிப்பை தொடர்வதால் வெளியூருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ரயில்வே எஸ்ஐ அசோகன், ஆர் பி எஃப் எஸ் ஐ கோவிந்தசாமி மற்றும் காவலர்கள் ரவிசங்கர், கண்ணதாசன் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை