• சற்று முன்

    விளையாட்டில் சாதிக்க நினைக்கும் மாணவிகளுக்கு இலவசமாக உபகரணங்களை வழங்கிய அமைச்சர் பாண்டியராஜன்.


    ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர், திருநின்றவூர் பட்டாபிராம், திருமுல்லைவாயில், அம்பத்தூர்,சூரப்பட்டு பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த 20கும் மேற்பட்ட மாணவிகள் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க நாளை கிருஷ்ணகிரி செல்கின்றனர்.இதனால் இன்று ஆவடி சட்டமன்ற  அலுவலகத்திற்கு வந்து மாணவிகள் அமைச்சர் பாண்டியராஜன் அவர்களை சந்தித்தனர்.அப்போது அமைச்சர் மாணவிகளுடன்  விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்றால் கிடைக்கக்கூடிய அரசுப் பணி குறித்தும் மத்திய அரசு வழங்கக்கூடிய  விளையாட்டு துறைக்கான நிதி குறித்தும்  மாணவிகளிடம் கலந்துரையாடினார். இதனையடுத்து மாணவிகளுக்கு  தேவையான 30 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை திஷா ஸ்போர்ட்ஸ் அகாடெமி மூலமாக  அமைச்சர் பாண்டியராஜன் வழங்கி ஊக்குவித்தார்.

    இதனைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் அமைச்சர் உபகரணங்களை வழங்கியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும்,மேலும் விளையாட்டு துறையில் சாதித்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்போம் எனவும் உறுதி அளித்து அனைவரிடத்திலும் வாழ்த்து பெற்று சென்றனர். இந்த நிகழ்வில் ஆவடி மாநகராட்சி நகர கழக செயலாளர் ஆர்சி தீனதயலன் உள்பட விளையாட்டு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad