திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை டிஐஜி காமினி திறந்து வைத்தார்
வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் புதுப்பேட்டை சாலையில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் வேலூர் சரக டிஐஜி காமினி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு, வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன், ஆய்வாளர்கள் பழனி, உலகநாதன், உட்பட மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்...
கருத்துகள் இல்லை