திருவண்ணாமலை சத்திரம் டோல் அருகே விபத்து !
திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி சொரந்தை காலனியை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் முரளி (வயது 32). இவரது மனைவி இன்பமணி (வயது 30). இவர் நார்த்தாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கணவன் மனைவி இருவரும் திருவண்ணாமலையிலிருந்து மல்லவாடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சத்திரம் டோல்கேட் அருகே பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் முரளி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை