திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை இரண்டாம் நாள் இரவு தீபத்திருவிழா
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும்,பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் தீபத்திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் திருவிழாவான இன்று இரவு அண்ணாமலையார் ஆலயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க ஒரே நேரத்தில் சோடச உபசாரம் என்று சொல்லக்கூடிய தீப ஆராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து ஆலயத்தின் வெளியே உள்ள 16 கால் மண்டபத்தில் வெள்ளி இந்திர விமானத்தில் அண்ணாமலையார் உள்பட பஞ்சமூர்த்திகளும் எழுந்தருள ஒரே நேரத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கும் பஞ்ச கலை என்று அழைக்கப்படுகின்ற மகா தீபாராதனை நடைபெற்றது அதனைத்தொடர்ந்து சாமி புறப்பாடு நடைபெற்றது நான்கு மாட வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்கள்
கருத்துகள் இல்லை