சென்னை பெரு நகர மாநகராட்சி, சுகாதாரத்துறை அலட்சியம் !
சென்னை பழையவண்ணாரப்பேட்டை ஜீ.ஏ.ரோடு வார்டு 49ல் சி.எஸ்.ஐ ரெய்னி மருத்துவமனை அருகே மற்றும் அப்பகுதி முழுவதும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள்,உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையில் ஆங்காங்க வாகனங்கள்,ஆட்டோக்கள் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பல இடங்களில் மாநகராட்சி நடைபாதை கடைகளை அகற்றிவருகிறது ஆனால் இப்பகுதியில் உள்ள இந்த நடைபாதை கடைகளை ஏன் அகற்றவில்லை என பொதுமக்கள் கேள்வி? சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் பொதுமக்கள் சுகாதாரமில்லாத பகுதியில் உணவகம் அமைக்கப்பட்டதை புகார் தெரிவித்தால் மேலிடத்து விவகாரம் இதுல தலையிடாதிங்க என்றுகூறி அனுப்பியுள்ளனர்.அதிகாரியின் பதிலாள் பொதுமக்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.இதனை உயர்அதிகாரிகள் கவனத்தில்கொண்டு நடைபாதை கடைகள், உணவகத்திற்க்கும் சுகாதாரத்துறை அபராதம் விதித்து அகற்றவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்.
கருத்துகள் இல்லை