தொண்டி அருகே மதுக்கடை திறந்த்தால் ஆத்திரமுற்ற பொது மக்கள் போராட்டத்தால் மதுக்கடை அடைப்பு
தொண்டி அருகே கிராமங்களுக்கு செல்லும் சாலையின் அருகில் மதுக்கடை திறந்த்தால் ஆத்திரமுற்ற பொது மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து மதுக்கடை நிறந்தரமாக மூடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே புதக்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தளிர்மருங்கூர், பானவயல் கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்க கடந்த ஆறுமாத காலமாக முயற்சி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டுவந்த்து. இந்நிலையில் நேற்று திடீரென மதுக்கடை திறக்கப்பட்டது அகனால் ஆத்திரமுற்ற பொது மக்கள் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தைகளுடன் ஒன்று திரண்டு கடைக்கு முன்பு மேதுக்கடையை அடைக்க கோரி முற்றுகையிட்டனர். தொண்டி காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சமாபதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அதில் போராட்டம் நடத்திய பெண்கள் கலையவில்லை. ஆத்திரமுற்ற பெண்கள் மதுக்கடையைச் சுற்றி அடைக்கப்பட்டிருந்த வேலியை சாய்த்து உள்ளே செல்ல முற்பட்டதை தொடர்ந்து பதட்டம் நிலவியது. அதன் பிறகு திருவாடானை தாசில்தார் சேகர் மற்றும் துணைக்கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மதுக்கடை இங்கிருந்துர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை திறக்கப்டாது என்ற உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றார்கள்.
கருத்துகள் இல்லை