Header Ads

  • சற்று முன்

    திருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி


    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஒவ்வொரு திங்கட்கிழமை காலை ஐந்து மணி முதல் 9 மணி வரை  ஆட்டுச் சந்தை நடைபெறும். இந்த ஆட்டுசந்தைக்கு  இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளையும் அதை வாங்க வியாபாரிகளும் அதிக அளவில் கூடுவார்கள்.


    அப்படி ஆட்டு சந்தையில் ஆடுகள்  விற்பனை பல லட்சம் ரூபாய் கைமாறும். இப்படி நடக்கும் ஆட்டுசந்தை ஆடுகளை வாங்க விற்க வரும் நபர்கள் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்திக் கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இவ்வாறு நிறுத்திக்கொள்ளும் சூழ்நிலையில் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் செல்வதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது எனவே உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad