திருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்தது. மிதந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் யாரும் அருகில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. அதனை கண்ட மக்கள் உடனடியாக தொண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் வந்த தொண்டி காவல் நிலையத்தார் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த முகம்மது சாஸ்(36), அபுஷேக் அபூர்கான் (21) மற்றும் திருவெற்றியூர் குணசேகரன் (50) ஆகியோர்கள் கண்மாய்க்குள் மிதந்த பிரேதத்தை மீட்க நீச்சல் அடித்து சென்று பிரேதத்தி காலில் கயிறு மூலம் கட்டி கண்மாய்க்குள் மீட்பு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்த ஆண் நபர் சுமார் 45 வயது இருக்கும் இவர் அரக்கு நிறத்தில் கால்சட்டை மட்டும் அணிந்திருந்தார் யார் என்பது தெரியவில்லை. இவரது மரணம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிந்த தொண்டி காவல் நிலையத்தார் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்..
கருத்துகள் இல்லை