• சற்று முன்

    ஓசூர் சத்தமேயில்லாமல் சிலம்ப போட்டியில் கின்னஸ் சாதனை படைத்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள சிலம்பாட்ட வீரர்,வீராங்கனைகள்


    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வஉசி நகரில் குடியிருந்து வரும் பயிற்சியாளர் லோகநாதன்(38), இவர் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பாட்டத்தை இக்கால இளைஞர்களிடம் பிரபலப்படுத்த வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டு எந்த எதிர்ப்பார்ப்புமில்லாமல் பயிற்சி வழங்கி வருகிறார்.இவரிடம் பயிற்சி பெற்றுவரும் மாணவ - மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற சிலம்ப போட்டிகளில் முதல் பரிசை வென்றுவந்துள்ளனர்.

    கடந்த மாதம் பாண்டிச்சேரியில் நடைப்பெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்ற ஓசூர் சிலம்ப வீரர்கள் சிறப்பான முறையில் செய்து காட்டியதை வியந்து பார்த்த மலேசிய வாழ் தமிழர்கள்,மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலம்ப போட்டியில் பங்கேற்கவும் பயிற்சியாளர் லோகநாதன் குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் மலேசியா கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலல் (Bukit jalil) மைதானத்தில் சிறுவர்,நடுத்தர வயதினர், பெரியவர்கள் என மூன்று பிரிவுகளாக ஆசிய அளவில் நடைப்பெற்ற சிலம்ப போட்டியில், இந்தோனேசியா,இலங்கை,ரஷ்யா,சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300 க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்ற போட்டியில் தமிழகத்திலிருந்து இந்தியா சார்பாக ஓசூரை சேர்ந்த ஆண்,பெண் என 6 பேர் பங்கேற்றுள்ளனர். சுகுந்தன்(10), வித்நாசாகர்(27) தங்கம் மோகிதா(15) மற்றும் பூஜா ஸ்ரீ(17) வெள்ளி யையும், தேவி(36) லோகநாதன்(38) ஆகியோர் வெண்கலம் என வெற்றி பெற்றுள்ளனர், வித்யாசாகர்(27) மற்றும் பூஜா ஸ்ரீ(17) ஆகியோர் தொடர்ந்து 5 நிமிடம் தீப்பந்தம் சுற்றி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். மேலும் 6பேர் கொண்ட குழு அடிமுறை விளையாட்டில் தங்கத்தையும் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

    ஓசூர் பகுதிகளில் சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டு மலேசியா வரையில் தமிழனின் பாரம்பரியத்தை பிரதிபலித்து வெற்றி பெற்ற இவர்களை அரசும், அதிகாரிகளும் குறைந்த பட்சம் பாராட்டுக்களை கூட தெரிவிக்கவில்லை என ஆதங்கப்படும் பயிற்சியாளர் லோகநாதன் அரசு பள்ளிகள் தோறும் சிலம்பாட்டத்தை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்


    எமது செய்தியாளர் : சி. முருகன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad