கோபால்ஜி அவர்களின் தலைமையில் சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி பிரம்மோற்சவ திரு குடை இன்று ஊர்வலமாக ஆவடி வந்தடைந்தது
ஆவடி அடுத்த கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி குடையை தரிசனம் செய்தனர் பின்னர் பட்டாபிராம் அமைந்துள்ள நாகவல்லி அம்மன் ஆலயம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பெருமாளின் தரிசனம் பெற்றனர் பின்னர் தண்டுறை பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலுக்கும் சென்ற பொழுது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தகோடிகள் மேல வாத்தியங்களுடன் பெருமாளின் பொற் பாதங்களுக்கு மலர்தூவி ஆலயம் வரை பிரம்மோற்சவ குடையை அழைத்துச் சென்றனர் பின்னர் சாஸ்திரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி சிவசக்தி கருமாரி அம்மன் ஆலயத்தை திருப்பதி பிரம்மோற்ஸவம் திரு குடை ஊர்வலம் வந்தடைந்தது இந்த பிரம்மோற்சவ திரு குடை களுக்கு அறங்காவலர் ஸ்ரீதர் சாமிகள் அங்க வஸ்திரங்கள் கட்டப்பட்டு கற்பூர தீப ஆரத்தி எடுக்கப்பட்டது பின்னர் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் திருப்பாதங்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆசி பெற்றனர் பின்னர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த ஆலயத்தில் திரு குடையின் உடன் வந்திருந்த ஸ்ரீபதி ஜி அவர்களும் சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பட்டாபிராம் சாஸ்திரி நகர் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திலும் திருக்குறளுக்கு சாஸ்திரிநகர் பொதுப்பணி மன்ற குழுவினர் திருக்குடை க்கு மாலை அணிவித்து அன்னதானமும் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் பொதுப்பணி மன்ற தலைவர் சம்பத் துணைத் தலைவர் மூர்த்தி கலந்து கொண்டனர்
செய்தியாளர் : திருவள்ளுர் - B.V.ராஜன்
செய்தியாளர் : திருவள்ளுர் - B.V.ராஜன்
கருத்துகள் இல்லை