• சற்று முன்

    ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவினையோட்டி ஓவியப் போட்டி நடத்தப்பட்டது


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள  அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையோட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே ஓவியப்போட்டி நடைபெற்றது, இப் போட்டியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இதில் எல்கேஜி பள்ளி குழந்தைகள் முதல், +2 மாணவ, மாணவிகள் வரை பங்குபெற்றனர், குழந்தைகள் தங்களுடைய கலைத்திறனை பல்வேறு வண்ணங்களில் வண்ணங்களைத் தீட்டி தங்களின் படைப்புகளையும் வெளிப்படுத்தினர் மேலும் இப்போட்டியினை தனியார் ஓவிய அமைப்புகள் ஒன்றினைந்து நடத்தப்பட்டது, இப்போட்டியில் சிறப்பான முறையில் தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு வெற்றி கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad