அண்ணனுர் ரயில் நிலையம் அருகில் அரசு மது பானக்கடையை எதிர்த்து தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நூதன போராட்டம் நடத்தினர்
சமூக குற்றங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை கருதி ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அருகில் அண்ணனூர் ரயில் நிலையம் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைகளை எதிர்த்து போராட்டம் நூதன முறையில் குடிமகன்களை அவமதிக்கும் விதமாக ஆரத்தி எடுத்து குடிமகனே குடிமகனே குடி கெடுக்கும் குடி மகன்களே வா வா என பாட்டு பாடி ஆரத்தி எடுத்து போராட்டம் நடத்தினோம்
இதில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அதில் 6 பெண்கள் 2 ஆண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டோம் ஏற்கனவே இந்த கடைகளை அகற்றக்கோரி குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த மதுக்கடைகளை அகற்றக்கோரி நீதிமன்றம் வரை சென்று எங்களுக்கு நீதி கிடைக்காததால் இப் போராட்டமானது நடைபெற்றது இதற்கு தலைமை தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கலைச்செல்வி சட்ட ஆலோசகர் கவிதா ஆவடி நகர தலைவர் சௌந்தர்யா மற்றும் பொதுமக்கள்
கருத்துகள் இல்லை