Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை பிஎஸ்என்எல் ஊழியர்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து பி எஸ்என்ல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


    திருவண்ணாமலை பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி ஆனபிறகும் கூட சம்பளம் வழங்காததால் மத்திய அரசாங்கம் மற்றும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய அரசு மற்றும் பிஎஸ்என்எல் நிர்வாகம் ஆகஸ்ட் மாத சம்பளத்தை வழங்க வேண்டும். வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கிட வேண்டும். கொடுக்கக் கூடிய சம்பளம் மாதாமாதம்  ஒன்றாம் தேதி வழங்கி விடவேண்டும். பேசிப் பேசிப் பார்க்கும் ஊழியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். என்று சம்பளம் வழங்காத பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்றது. தேசிய தொலைபேசி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செய்தியாளர் : திருவண்ணாமலை -மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad