• சற்று முன்

    படிக்கும் பள்ளியிலேயே ஆதார் எடுத்து கொடுத்ததற்கு அஞ்சல் துறைக்கு பெற்றோர்கள் பாராட்டு


    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  படிக்கும் மாணவர்களுக்கான ஆதார் முகாமை அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அஞ்சல் துறை காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளர் இரா.சுவாமிநாதன் ஆதார் முகாமினை துவக்கி வைத்து மாணவர்களுக்கான ஆதார் கார்டினை வழங்கினார்.முகாமிற்கான ஏற்பாடுகளை அஞ்சல் துறை அலுவலர்கள் சேது அரசன் மற்றும் முத்து  இருளாண்டி செய்து இருந்தனர்.மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டும் , பெற்றோர்களாகிய நாங்களும் வேலைக்கு செல்லாமல் விடுமுறை கேட்டு பலமுறை ஆதார் எடுக்க சென்று முயற்சி எடுத்த நிலையில் மாணவர்களுக்கான ஆதார் கார்டு எடுக்கும் முகாம் பள்ளியிலேயே நடைபெற்றதை பெற்றோர்கள் பலரும் வெகுவாக பாராட்டி, ஏற்பாடு செய்த அஞ்சல் துறைக்கு நன்றி தெரிவித்தனர் .நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  படிக்கும் மாணவர்களுக்கான ஆதார் முகாமை அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் துவக்கி வைத்து ஆதார் கார்டினை மாணவர்களுக்கு வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்


    .செய்தியாளர் : மதுரை மாவட்டம் -  வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad