திருவண்ணாமலை காந்தி சிலையருகே ரோட்டரி சங்கம் மற்றும் பள்ளி மாணவிகள் இணைந்து சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .
திருவண்ணாமலை ரோட்டரி சங்கங்களின் சார்பில் காந்தி சிலை அருகில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப்பிரசுரங்களை அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் இணை காவல் கண்காணிப்பாளர் அனிதா மற்றும் காவல்துறையினர் இந்த விழிப்புணர்வு பேரணியை ஒழுங்கு படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியின்போது திருவண்ணாமலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிமுறைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்றவர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் சரியாக அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரோட்டரி சங்கங்களின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது
கருத்துகள் இல்லை