Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவமனையில் உடல் ஆரோக்கியம் குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது


    திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவமனையில் உடல் ஆரோக்கியம் குறித்து சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது.

    முன்னாள் ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.மேலும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சந்தேகங்களுக்கும் தகுந்த பதில் அளித்து உடல் அழிக்கும் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கர்ணல் ருஷிகேசவன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். தங்கதுரை அவர்கள் இந்தக் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
    டாக்டர் சுகுமார், டாக்டர் சசிகலா, டாக்டர் ஆனந்த்,  டாக்டர் கார்த்திக், டாக்டர் மாலினி ஆகியோர் கலந்து கொண்டு சர்க்கரை நோய் காச நோய் மற்றும் பல்வேறு நோய்களில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் அதற்கு என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்து சிறப்புரையாற்றினர்.  திருவண்ணாமலை லயன்ஸ் சங்க டைரக்டர் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மருத்துவமனையில் மருந்துகள் சரியான முறைகளில் கிடைக்கிறதா மற்றும் குறித்த நேரத்தில் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் சரியாக கவனிக்க படுகிறதா என்பது  சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் பங்கு பெற்ற அனைத்து பயனர்களுக்கும் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு அவர்களுடைய சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்பட்டன.  அருகில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள மருந்துகளை சரியான நேரத்தில் ஒரே நேரத்தில் கிடைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
    மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பயனாளிகள் வருவதால் வரக்கூடிய நேரத்தில் அனைத்து மருந்துகளும் ஒரே நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னாள் ராணுவ வீரர்கள் முன்வைத்தனர். பாடுபட்ட அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் உடைய தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad