நீதிபதிக்கே டிமிக்கி கொடுத்த நகராட்சி அலுவலர்கள்
செம்பரப்பாக்கம்
நகராட்சியில் 15வது வார்டுகளில் சுமார்
65,000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகராட்சி
துப்புரவு பணியாளர்கள் தெருக்களில் குப்பைகளை முறையாக யாரும் அள்ளுவதில்லை.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக்கிடக்கினற்ன. இதனால் தொற்றுநோய் பரவும்
அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்தும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்
பசுமை தீர்ப்பாயத்தின் ஆய்வு நடை பெறவிருப்பதால் மூன்றுக்கும்
மேற்பட்ட இடங்களில் பசுமை உரக்குடில் அமைத்து குப்பை
தரம் பிரித்து வழங்குவது பற்றி விழிப்புணர்வு நிகழ்த்தி
வந்தனர். வார்டு வாரியாக நடைபெற
வேண்டிய விழிப்புணர்வை பெயரளவில் ஓரிரு வார்டுகளில் நடத்திவிட்டு
உயர் அதிகாரிகளுக்கு கணக்கு கட்டிவிட்டு மீதியை
ஆட்டையை போட்டுவிட்டனர்.நகராட்சி பொறியாளர் சண்முகம்
சுகாதார ஆய்வாளர் நாகராஜ்நகராட்சி ஆணையர்வசந்தி உட்பட இந்த
மூன்று அதிகாரிகளும் என்று பொது மக்கள்
மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பெயரளவில் நடைபெற்ற ஆய்வு
இந்த சூழலில் பசுமை தீர்ப்பாயத்தின்,
திடக்கழிவு மேலாண்மைக்கான, கண்காணிப்பு அதிகாரி, நீதிபதி. பி. ஜோதிமணி நேற்று
முன்தினம், செம்பாக்கத்தில் உள்ள, பசுமை உரக்குடில்களில்
ஆய்வு நடத்தினர்..ஆய்வு நடைபெறும் இடங்களில்
மட்டும் பிளிச்சிங் பவுடர், தூவப்பட்டன. அதன்பின்,
மீண்டும் வழக்கம்போல், பல சாலைகளில் குப்பை
தேங்கி, சுகாதார சீர்கேடு நிலவி
வருகிறது. உயர் அதிகாரிகள் தலையிட்டு
அனைத்து வார்டுகளிலும் பசுமை உரக்குடில் அமைக்க
வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை