ஜவ்வாது மலை அருகே பீமன் நீர்விழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

போளூர் அருகே ஜவ்வாதுமலை பகுதியில் ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சியில் தற்போது பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோமுட்டேரி கிராமத்தின் அருகே கோமுட்டேரி ஆறு, செங்குத்தான பாறைகளில் சுமார் 70 அடி உயரத்திலிருந்து விழும் பீமன் நீர்வீழ்ச்சியில் ஜவ்வாது மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் குளித்து வருகிறார்கள்.
இந்த நீர்வீழ்ச்சிக்கு பீமன் நீர்வீழ்ச்சி என பெயர் வரக் காரணம் முன்காலத்தில் பீமன் பேரண்டச்சியிடம் சண்டை இட்டதாகவும் சண்டையிடும்போது பீமனும் முட்டி போட்டதாகவும் கூறுகின்றனர். பீமன் கால் பதித்த இடம் இந்த நீர்வீழ்ச்சியில் இன்றும் காணப்படுவதால் இந்த நீர்வீழ்ச்சி பீமன் நீர்வீழ்ச்சி என்று கூறுகின்றனர். ஜவ்வாது மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் குளித்து வருகிறார்கள்
கருத்துகள் இல்லை