• சற்று முன்

    குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்


    திருவண்ணாமலையில் நடைபெற்ற குறை தீர்வு கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் வராததால், மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிக்கள் குறைதீர்வு கூட்டம் செவ்வாய் அன்று நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகில் உள்ள சாரணர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் யாரும் வரவில்லை, அதிகாரிகளுக்கு வேறு நிகழ்ச்சிகள் உள்ளதால்,  மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தை அதிகாரிகளின் உதவியாளர்கள் பங்கேற்று நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியபோது, கடந்த 3 ஆண்டுகளாக குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் யாரும் சரிவர பங்கேற்பதில்லை.

    ஊனமுற்றவர்கள் என்பதால், அதிகாரிகள் எங்களை உதாசீனப்படுத்தி வருகின்றனர். இது குறித்து பலமுறை முறையீடு செய்தும் எங்களை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர் என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை சமாதானப்படுத்தி, குறைதீர்வு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
    செய்தியாளர் : திருவண்ணாமலை -  மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad