• சற்று முன்

    பெண்களுக்கு மார்பக புற்றுநோய் விட்டமின் டி குறைபாட்டால் வருவதாக ஆய்வில் கண்டறிந்தனர்.

    விட்டமின் டி நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். இது 'சன் சைன் ஊட்டச்சத்து' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த சத்தை சூரிய ஒளியில் இருந்து பெற முடியும். அதே மாதிரி இதை சில உணவுகளிலிருந்தும் நாம் பெறலாம். இந்த விட்டமின் டி பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்தை உறிஞ்ச உதவி செய்கிறது. மேலும் நமது நோயெதிப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மை காக்கிறது.

    இதுமட்டுமல்லாமல் தற்போதைய ஆராய்ச்சி படி இந்த விட்டமின் டி சத்தைக் கொண்டு மார்பக புற்று நோயை தடுக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது. மார்பகத்தில் தேவையில்லாமல் வளரும் செல்கள் இணைந்து புற்றுநோய் கட்டிகளை உருவாக்குகிறது. இப்படிப்பட்ட புற்றுநோய் செல்களை விட்டமின் டி சத்து எவ்வாறு அழிக்கிறது என்பதை கீழ்க்கண்டவாறு நாம் காணலாம்.

    மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் 
    விட்டமின் டி மற்றும் மார்பக புற்றுநோய் இடையே நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. அதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் மார்பக புற்றுநோயும், விட்டமின் டியும் எதிர்மறை தன்மை கொண்டிருந்தது. அதாவது உங்கள் உடம்பில் போதுமான விட்டமின் டி சத்து இருந்தால் மார்பக புற்று நோய் வராமல் தடுத்து விட முடியும்.
    சூரிய ஒளி
    இந்த விட்டமின் டி சத்து சூரிய ஒளியில் இருந்து நிறையவே கிடைக்கிறது. விட்டமின் டி பற்றாக்குறை கொண்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. அதே நேரத்தில் விட்டமின் டி சத்தை அதிகம் பெற்ற பெண்களுக்கு 45% மார்பக புற்று நோய் வருவதற்கான ஆபத்து குறைந்துள்ளது என்று ஆராய்ச்சி ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன.

    விட்டமின் டி இன் நிலைகள் விட்டமின் டியின் பல்வேறு நிலைகளை
    தற்போதைய ஆராய்ச்சிகள் நிரூபித்து உள்ளன. இந்த விட்டமின் டி மார்பக புற்று நோயை தடுக்கும் ஆற்றலை பெற்றிருப்பது ஒரு வரப்பிரசாதம். இதை இன்றைய ஆய்வுகள் வெளிப்படுத்தி இருப்பது பெண்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad