விச வாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
நேற்று மாலை நாகப்பட்டினத்தில் , துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மாதவன் 38, சக்திவேல் 28, இருவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
உயிரிழந்த .மாதவன். சக்திவேல் .ஆகிய இருவரையும் இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.
எனவே : விசவாயு தாக்கி பலியான இருவரின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை