டெங்கு காய்ச்சல் - பொதுமக்களை உஷார்படுத்திய பள்ளி மாணவர்கள் டெங்குவை ஒழிக்க களத்தில் இறங்கிய பள்ளி மாணவர்கள்
இந்த புழுதான் டெங்கு கொசுவை உருவாக்கும் " - பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் !தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்,தாங்களே களத்தில் இறங்கி , தாங்கள் வாழும் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பணியில் நாளில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பெற்ற மாணவர்கள், பொதுமக்களுக்கும், தங்கள் சுற்றுப்புறத்தினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,ஆசிரியை முத்துமீனாள் ஆகியோரின் ஆலோசனையின்படி மாணவர்கள், தாங்களே களத்தில் இறங்கி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், ஒவ்வொரு தெருவாக சென்று, வீடுகள் மற்றும் தெருக்களில், கொசு உற்பத்திக்கு சாதகமாக உள்ள, பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்ற, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சில இடங்களில், மாணவர்களே களத்தில் இறங்கி, தேவையற்ற பொருட்களை அகற்றினர். மாணவர்களின் இந்த செயலுக்கு, பொதுமக்களிடம் பாராட்டு குவிந்துள்ளது.
கருத்துகள் இல்லை