Header Ads

  • சற்று முன்

    கண்மாய்களில் சரள் மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த காங்கிரஸ் நிர்வாகி


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முதல் மீளவிட்டான் வரை 2வது ரெயில்வே பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக தேவைப்படும் சரள் மண்ணிற்காக சிலர் கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தர் தாலூகா பகுதிகளில் உள்ள கண்மாய்களில் விவசாயத்திற்கு என்ற பெயரில் உரிய அனுமதி இல்லமால் தொடர்ச்சியாக சரள் மண் அள்ளி வருவதாகவும், கயத்தார் தாலூகா மும்மலைபட்டி, ஓட்டப்பிடாரம் தாலூகா பரிவல்லிகோட்டை பகுதியில் இரவு பகலாக மண் அள்ளப்பட்டு வருவதாகவும், விவசாய பயன்பாட்டிற்காக விவசாயிகள் கண்மாய்களில் மண் எடுத்தால் 50ஆயிரம் முதல் 1லட்சம் வரை அபராதம் விதிக்கும் அதிகாரிகள், ஆனால் இரவு பகலாக சரள் மண் கொள்ளையடிப்பவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சரள் மண் கொள்ளை போவதை தடுக்க வேண்டும், 

    கொள்ளையடிப்பவர்களுக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணை தலைவரும், வழக்கறிஞருமான அய்யாலுச்சாமி, தனது கோரிக்கை அடங்கிய மனுவினை தேங்காய், பூ,பழம், பத்தி, சூடம் என பூஜைபொருள்களுடன் தாம்பூலத்தில் வைத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தனது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு அய்யலுசாமி கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் சூரிய கலாவிடம் அளித்தார். இதன் பிறகும் நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அய்யலுச்சாமி தெரிவித்துள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் முத்து உடனிருந்தார்

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad