மதுரையில் பாத்திமா கல்லூரி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ****
நேற்று (11.08.2019) மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள் மதுரை மாநகர் கல்லூரியில் மாணவிகளுக்கு கீழ்க்கண்ட விழிப்புணர்வு
1. சாலை விதிகளை எவ்வாறு பின்பற்றுதல்.
2. ஓட்டுனர் உரிமத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனை எவ்வாறு பெறுவது,
3. வாகனங்களுக்கு காப்பீடு செய்வதினால் ஏற்படும் நன்மை தீமைகள்.
4. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்வோர்கள் வாகன விபதுக்குள்ளாகி அதனால் ஏற்படும் பின் விளைவுகள்.
5. 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்களை வாகனங்கள் இயக்க அனுமதிப்பவர்களுக்கு என்னென்ன தண்டணைகள்.
7. வாகன விபத்துக்கள் ஏற்படும் முக்கிய கரணங்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டுவதற்கு முன்னர் வாகங்களை எவ்வாறு சரி செய்வது.
8. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அதன் பின்விளைவுகள்,
9. இருசக்கர வாகனங்களில் மூன்று நபர்கள் பயணிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றிற்கான தண்டனைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் 4000 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை