• சற்று முன்

    வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணிகள் நிறைவு.


    வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்காக நேற்று வாக்குப் பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 72 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து வாக்கு பெட்டிகள் அனைத்தையும் வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரிகள் கொண்டுவரும் பணிகள் நேற்று இரவு முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.இந்த நிலையில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் சீல் வைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.தற்போது வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது 24 மணி நேரமும் இயங்கும் சிசிடிவி கேமராவின் மூலம் வாக்கு எண்ணும் மையமானது கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற 9ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையானது நடத்தப்பட்ட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad