திருவாரூர்~காரைக்குடி பாசஞ்சர் ரயில் பயணநேரம் குறைக்கவும், கேட் கீப்பர் நியமிக்கவும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ராயிலை மறிக்க முயன்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் 7 மணி நேரம் பயணித்து பின்னர் திருவாரூர் சேர்கிறது.காரணம் என்னவெனில்,வழியில் கேட் கீப்பர் இல்லாததால், ரயில் எஞ்சின் டிரைவர் கீழே இறங்கி கேட் அடைத்து, ரயிலை இயக்கி பின்னர் நிறுத்திவிட்டு கேட்டை திறந்து வைத்து விட்டு செல்ல வேண்டியுள்ளது. இந்தநிலை இந்தியாவில், வேறெங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், கழிவறை வசதிகள் கிடையாது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சாத்தையா முன்னிலையில், மாநில செயற்குழு உறுப்பினர் பி.எல்.ராமச்சந்திரன் தலைமையில் 40 க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் வந்தனர்.
நுழைவாயிலில் நுழைய முற்பட்ட போது போலீசார் தடுத்து நிறுத்தினர் .போராட்டக்காரர்கள் கோஷமிட்டபடி முன்னேறிச் சென்றனர். அப்போது போலீசார் இன்னும் ஒருமாதத்தில் நிலைமை சரியாகும் என்றனர். போராட்டக்காரர்கள் அதிகாரிகளின் உத்தரவாதத்தை அடுத்து போராட்டக்காரர்கள் களைந்து சென்றனர்..
செய்தியாளர் : சிவகங்கை -சண்முக சுந்தரம்
கருத்துகள் இல்லை