கோவில் தர்மகத்தா வீட்டை இடிக்கும் போது மன்னர் காலத்து புதையல் கிடைத்தது .
சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரத்தில் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
ஆரணி எஸ்.வி.நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த ஜாகீர்தாரர்கள் கட்டுப்பாட்டில் இக்கோவில் இருந்தது.அப்போது கோவில் நகைகளை பாதுகாக்க ஜாகீர்தாரர்கள் மூலம் தர்மகர்த்தாவிடம் இரும்பு லாக்கர் வழங்கப்பட்டது. இதனை அவர்கள் பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் லட்சுமி நரசிம்மர் கோவில் இந்து அறநிலையத்துறை வசம் வந்தது. அப்போது தர்மகர்த்தாவாக இருந்த பெருமாள் பிள்ளை வசம் இருந்த நகைகளை இந்து அறநிலையத்துறையினர் எடுத்து சென்றனர். லாக்கரை மட்டும் விட்டு சென்றனர்.
இந்த லாக்கர் 25 ஆண்டுக்கு மேலாக தர்மகர்த்தா வீட்டிலேயே இருந்தது. தற்போது தர்மகர்த்தாவின் வாரிசுகள் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். இதனால் அந்த லாக்கரை எதிரே உள்ள வீட்டுக்கு பக்கத்தில் குப்பை கொட்டும் இடத்தில் போட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் இரும்பு லாக்கர் இருப்பதை கண்டு கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். உடைக்கப்பட்ட இரும்பு லாக்கர் சேத்துப்பட்டு தாசில்தார் சுதாகர், பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு வந்தனர். அவர்கள் 800 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கரை திறக்க முயன்றனர். முடியாமல் போகவே அதனை சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து வேலூர் அருங்காட்சிய காப்பாட்சியர் சரவணன் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் லாக்கரை உடைத்து திறந்தனர். அதில் 46 கிராம் தங்கத்தாலி குண்டு, அலுமினியத்தாலான ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா நாணயங்கள், 17 பித்தளை கால் காசு, 2 வெள்ளி மகாலட்சுமி பொட்டு ஆகியன இருந்தது. அதனை கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை