திருவண்ணாமலை தேனிமலை அருகில் உள்ள கேஸ் அலுவலகத்தில் மின்கசிவினால் தீவிபத்து- பரபரப்பு.
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் யோகலஷ்மி என்ற தனியார் கேஸ் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.இந்த அலுவலகத்தில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மின்கசிவினால் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் அலுவகத்தில் இருந்த கண்ணாடி அறைகள் வெடித்து சிதறியது. மேலும் அலுவலகத்தில் உள்ள முக்கிய பைல்கள்,பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. கேஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயிணை அனைத்தனர்.
கருத்துகள் இல்லை