திருவாடானை அருகே புரவி எடுப்பு விழா நடை பெற்றது. ஏராளமான பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே சூச்சனி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கார்காத்த அய்யனார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த புதன் கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கி ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பக்தர்கர்கள் ஆண்கள் பெண்கள் ஏராளமானோர் தொத்தார்கோட்டை கிராமத்தில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள் மற்றும் கருப்பர் சுவாமிகளை தோழ்களிலும், தலையில் ஏந்தி ஊர்வலமாக ஸ்ரீகார்காத்த அய்யனார் கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனை தொடர்ந்து கிராம மக்களால் அண்ணதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு அய்யனார் அருள் பெற்றுச் சென்றார்கள்.
கருத்துகள் இல்லை