அஞ்சல்தலை உள்ளடங்கிய உலக இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு குறு புத்தக வெளியீட்டு விழா
திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தில் அஞ்சல்தலை அடங்கிய உலக இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு குறு வடிவ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ் நூலினை வெளியிட இயற்கை ஆர்வலரும் வனத்துறை பாதுகாப்பாளர் முன்னாள் உதவியாளர் ஜனார்த்தனன் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார் .
முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், முதுநிலை அஞ்சல் அதிகாரி மைக்கேல் ராஜ், முதுநிலை ஆர்எம்எஸ் கோட்ட கண்காணிப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் சேகரிப்பு மைய அலுவலர் ராஜேஷ் நிகழ்ச்சியினை தொகுத்தளித்தார் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி ,நாசர், சதீஷ்,மதன், யோகா ஆசிரியர் விஜயகுமார், கார்த்திகேயன், தாமோதரன், சர்மா, முகமது சுபேர் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று நூலினை பெற்றுக் கொண்டார்கள்
கருத்துகள் இல்லை