திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவிலில் உள்ள தங்ககொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கொடியேற்றினர். இதையடுத்து அருணா சலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் விநாயகர், பராசக்தி அம்மன், சின்னநாயர்கள் வீதி உலா நடைபெற்றது.
இந்த விழா வருகிற 17-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலை சாமி வீதியுலாவும், விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தலைமையிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஆனி பிரம்மோற்சவம் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் அதிகரித்துள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் அணி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர் நேற்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை திருமஞ்சன கோபுரவாசல் வழியாக நடராஜர் எழுந்தருளி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் : திருவண்ணாமலை மூர்த்தி
கருத்துகள் இல்லை