திருவண்ணாமலையை அடுத்த கீக்களூர் கிராமத்தில் சாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்காவுக்கு உட்பட்ட கீக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது தந்தை ஞானப்பிரகாசம். இவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கீக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பானு மற்றும் ஆனந்தன் ஆகியோர் நெடுங்காலமாக சாராயம் விற்பனை செய்துகொண்டு வருகிறார்கள். கடந்த ஜூலை 24ஆம் தேதி எனது தந்தை ஞானப்பிரகாசம் மேற்கண்ட சாராய வியாபாரிகளிடம் சாராயம் வாங்கி குடித்தார் அன்று இரவு இறந்து விட்டார். இதேபோல் பலபேர் அவர்களிடம் சாராயம் குடித்து அதனால் இறந்துள்ளனர். இது பற்றி பலமுறை கீழ்பெண்ணாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் மாமூல் பெற்றுக்கொண்டு சாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதேபோல் வழுதலங்குணம் மற்றம் மட்டமலை ஆகிய ஊர்களில் சாராய விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. ஆகவே சாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் ஊரில் சாராயம் விற்பதை தடை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். அவருடன் 20க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
செய்தியாளர் : திருவண்ணாமலை மூர்த்தி
கருத்துகள் இல்லை