வேலூர் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக சண்முகசுந்தரம் பதவியேற்பு -
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக சண்முகசுந்தரம் பதவியேற்றுகொண்டார் இங்கு பணியாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டதால் சென்னை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து சண்முகம் வேலூருக்கு மாற்றப்பட்டு மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுகொண்டார் பதவியேற்பின் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்ட திரளான அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்
பின்னர் ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் மாவட்டம் பழமையான மாவட்டம் வெப்பம் நிறைந்த மாவட்டம் இங்கு சுற்றுசூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் விவசாயிகள் குறைகளை என்னிடம் தெரிவித்தால் அவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வேன் பொதுமக்கள் தங்களின் குறைகளை நேரிலோ அல்லது வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்தால் அவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு எந்த வித பாகுபாடின்றி திட்டங்களை கொண்டு சேர்ப்பேன் குடிநீர் பிரச்சணையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்
எமது செய்தியாளர்: ராஜ் ஈஸ்வரன்
கருத்துகள் இல்லை