Header Ads

  • சற்று முன்

    தென்னிந்திய புறா பந்தயப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற புறா உரிமையாளருக்கு பரிசளிப்பு


    சவுத் இந்தியன் ரேசிங் பீஜியன் சொசைட்டி நடத்திய 2019ஆம் ஆண்டிற்கான புறா பந்தயப் போட்டி 3  கட்டங்களாக நடைபெற்றது. 500 கிலோ மீட்டர் தூரப்போட்டி 2019  பிப்ரவரி 24இல் திருவள்ளூர் மாவட்டத்திலும், 750  கிலோ மீட்டர் தூரம் போட்டி ஆந்திரா மாநிலம் சிங்கராயகுண்டாவில் 2019 மார்ச் 9ஆம் தேதியும்,1000 கிலோ மீட்டர் தூர புறா பந்தயப் போட்டி தெலுங்கானா மாநிலம் மெகாபூபாத்தில் 2019 மார்ச் 25ஆம் தேதியும் நடைபெற்றன. 

    இப்போட்டிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட புறாக்கள் கலந்து கொண்டன. 500 கிலோ மீட்டர் புறா பந்தயத்தில் 7 மணி நேரம் 7 நிமிடத்தில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த யூசுப்நபி மகன் செய்யதுஅகமதுஇப்ராஹிமின் புறா முதலிடம், 750 கிலோ மீட்டர் புறா பந்தயத்தில் 15 மணி நேரம் 45 நிமிடத்தில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த யூசுப்நபி மகன் செய்யதுஅகமதுஇப்ராஹிமின் புறா முதலிடம் பிடித்தது. 

    1000 கிலோ மீட்டர் பந்தயத்தில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையைச் சேர்ந்த சாமித்துரை என்பவரது புறா 24 மணி நேரம் 43 நிமிடத்தில் முதலிடம் பிடித்தது. செய்யதுஅகமதுஇப்ராஹிம்-ன் புறா 2ஆம் இடம் பிடித்தது. இதையடுத்து, 2019ஆம் ஆண்டிற்கான புறா பந்தயப் போட்டியில் வெற்றி பெற்ற புறாவின் உரிமையாளர்களுக்கான பரிசளிப்பு விழா தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று  நடைபெற்றது. விழாவிற்கு சவுத் இந்தியன் ரேசிங் பீஜியன் சொசைட்டி நிறுவனர் கே.பழனியப்பன் தலைமை வகித்தார். போபால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை டி.ஐ.ஜி.  அஜய் பரதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். விழாவில், தென்னிந்திய ரேசிங் பீஜியன் சொசைட்டி உறுப்பினர்கள் மற்றும் புறா பந்தயப் போட்டியில் பங்கேற்ற அனைத்து புறா உரிமையாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 

    2019ஆம் ஆண்டுக்கான புறா பந்தயப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த யூசுப்நபி மகன் செய்யதுஅகமதுஇப்ராஹிமிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில்பட்டி ரேசிங் கிளப் நிர்வாகிகள் சாமித்துரை, செந்தில், பூமிநாதன், செல்வம், ராஜா, சார்லி, விஜய்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad