தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சௌபாக்யா மஹாலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநிலத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். பொதுசெயலரும், அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கப் பொருளாளருமான செல்வன், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கப் பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆன்லைன் மருந்து வணிகத்தை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி நாடு முழுவதும் மருந்து பொருள்களுக்கு 5 சதவீதம் சரக்கு, சேவை வரி என அமல்படுத்த வேண்டும்.திருச்சியில் மாநில சங்கத்திற்கு கட்டடம் கட்டவும், ஆன்லைன் மருந்து வணிகத்திற்கு தடை செய்யாவிட்டால் கடையடைப்புப் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஆன்லைன் மருந்து வணிகத்திற்கு எதிராக குரல் கொடுக்க வலியுறுத்தி உறுப்பினர்களை மருந்து வணிகர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு கொடுக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை