தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என வேலூர் தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறினார்.
வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள வேலூர் மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் ஆதரித்து இன்று மாலை வேலூர் மாவட்டம் கே. வி குப்பம் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கே வி குப்பம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்
அப்போது பேசிய அவர் ,
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் 38 உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைக்காக ஓரணியாகத் திரண்டு செயல்பட்டு வருகின்றனர்.அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது .எனவே வரும் காலங்களில் மக்கள் திமுக ஆட்சியை எதிர்பார்க்கின்றனர் இதன் காரணமாக விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றிருப்பதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர் இது மக்களை கொச்சைப்படுத்தும் செயல் என ஸ்டாலின் கூறினார்.வேலூர் மக்களவை தொகுதிக்கும் ஏப்ரல் மாதமே தேர்தல் முடிந்து இருக்க வேண்டும், திட்டமிட்ட சதியின் காரணமாகவும் திமுக மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் கூட்டு வைத்து பழி வாங்கும் நடவடிக்கையாக வேலூர் மக்களவைத் தொகுதி ரத்து செய்யப்பட்டது ஆனாலும் மற்ற 38 மக்களவைத் தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது என முக ஸ்டாலின் கூறினார்
செய்தியாளர் : வேலூர் - ராஜா - ஈஸ்வரன்
கருத்துகள் இல்லை