• சற்று முன்

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !

    ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. புது கோட்டை மாவட்டம்.  ஜெகதாபட்டினத்திலிருந்து நேற்று காலை 29ஆம் தேதி  கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கார்த்திக். குட்டியாண்டி. ராசு. மணோகர். ஆனந்த் ஆகிய ஐந்து பேரும் ஒரு படகில் நள்ளிரவில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டியிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி.தமிழக  மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
    பாதிக்கபட்ட மீனவர்களை மீட்டு தமிழக கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள்  மனமேல் குடியில் உள்ள தனியார் மருத்துவ மணையில் சேர்த்தனர் என்பது குறிப்பிடதக்கது.தமிழக மீனவர்களின் மீது தாக்குதல்.  படகுகளை சேதபடுத்தல். சிறைபிடித்தல். இது போண்ற சம்பவங்களை தொடர்ச்சியாக நடத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறித்து  வரும் இலங்கை கடற்படையினரின் இத்தகை செயல் மனித நேயமற்ற செயலாகும். எனவே : தமிழக மீனவர்களின் நலனை கருதி மத்திய , மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad