Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாய தொழிராளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்


    திருவாடானை ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தலுகா, திருவாடானையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்த ஆர்ப்பாட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா தலைவர் அருள்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர் குணசேகரன், தாலுகா செயலாளர் பால்ராஜ், தாலுகா பொருலாளர் ரெத்தினம், தாலுகா துணைத்தலைவர் பாலுச்சாமி மற்றும் தாலுகா துணை செயராளர் சகாயம் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையில பணபுரிவோருக்கு நாடாளுமன்ற தேர்தல் அன்று விடுப்பு ஊதியம் வழங்குவதாக அரசு அறிவித்த சட்டக்கூலியை உடனடியாக வழங்கிட வேண்டியும், 100 நாள் வேலை திட்டம் பல்வேறு பஞ்சாயத்துகளில் நிறுத்தியுள்ளதை தொடரவும், வறட்சியைப் போக்க அரசு அறிவித்த 150 நாள் வேலையை வழங்க வலியுறுத்தியும, தேர்தல் கால வாக்குறிதியான 100 நாள் வேலைத் திட்டத்தை 200நாள்  வேலையாக வலியுறுத்தியும், கடுமையான வறட்சியின் காரணமாக தாலுகா முழுவதும் உள்ள குடி தண்ணீர் பிரச்சணைக்கு உடன் தீர்வு கான போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக உள்ளாட்சி துறை மாவட்ட குழு நாகநாதன் வாழ்த்துரை வழங்கினார். இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் சிவசாமி, துரைசிங்கம் உள்ளபட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்


    செய்தியாளர் : திருவாடானை தாலுகா  LVஆனந்த்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad