திருவாடானையில் மருத்துவமனை தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் மருத்துவமனை தின விழாவினை தலைமை மருத்துவ மனையில் கொண்டாடினர். விழாவிற்கு நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் தலைமை தாங்கினார். முதன்மை மருத்துவர் ராஜ்குமார் முன்னிலைவகித்தார். மருத்துவர் அஸ்வின் மருத்துவ மனையின் சிறப்புகள் குறித்தும், மருத்து மனையில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து விளக்கி வரவேற்புரையாற்றினார். நீதிபதி பாலமுருகன் பேசுகையில் அரசு மருத்துவமனையை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்
நான் இந்த மருத்து மனையில் சிகிச்சை பெற்றேன் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும், மருத்துவர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதே போல் மருத்துவர்கள் மக்களுக்கு அரசு மருத்துவமனையின் சிறப்புகளை தெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இந்த விழாவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கறிஞர்கள் கண்ணன், ராம்குமார் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர் திருவாடானை தாலுகா LV.ஆனந்த்
கருத்துகள் இல்லை